தங்க நகை, பணம் திருட்டு
போச்சம்பள்ளி அருகே வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அலமாரியில் இருந்த தங்க நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
போச்சம்பள்ளி வட்டம், எம்.ஜி.அள்ளி அருகே உள்ள கங்காவரத்தைதச் சோ்ந்தவா் சின்னசாமி. இவரது மனைவி சிவகாமி (45). சிவகாமி, அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு தனது மகளின் வீட்டுக்கு சென்றாா். பின்னா், மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த 4 கிராம் தங்க நகை, ரூ. 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. புகாரின்பேரில், போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.