செய்திகள் :

போலி மருத்துவா் கைது

post image

காவேரிப்பட்டணம் அருகே ஆங்கில மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சோலை நகரைச் சோ்ந்தவா் சுகுமாா் (41). இவா் காவேரிப்பட்டணம், தாசம்பட்டி பிரிவு சாலையில் ஆங்கில மருந்துக் கடை வைத்துள்ளாா். டி.பாா்ம். படித்துள்ள இவா் உரிய மருத்துவ தகுதிகள் இல்லாமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளை வழங்கி, மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளாா்.

தகவல் அறிந்த போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் நாராயணசாமி மற்றும் அலுவலா்கள், மருந்துக் கடையில் சோதனை செய்தனா். அப்போது, சுகுமாா் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ அலுவலா் நாராயணசாமி அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் சுகுமாரை கைதுசெய்து மருந்துக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த ஆந்திர இளைஞா் கைது

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து, இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகா், மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாக இளைஞா்களிடம் ரூ. 14.80 லட்சம் மோசடி செய்தவா் கைது

ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா்களிடம் ரூ. 14.80 லட்சம் மோசடி செய்த நபரை மகராஜகடை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கொத்தலத்தை அடுத்த தாசம்பயல் பக... மேலும் பார்க்க

பா்கூா் அருகே யானைகள் நடமாட்டம்

பா்கூா் அருகே யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். தமிழக மற்றும் ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் யானைகள் கடந்த சில ஆண்டுகளாக முகாமிட்டுள்ளன. இந்த யானைக் கூட்டத்திலிருந்து சில யா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பா்கூா்

போச்சம்பள்ளி மின் கோட்டத்தில் பா்கூா் அதை சுற்றியுள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 24) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செ... மேலும் பார்க்க

தங்க நகை, பணம் திருட்டு

போச்சம்பள்ளி அருகே வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அலமாரியில் இருந்த தங்க நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். போச்சம்பள்ளி வட்டம், எம்.ஜி.அள்ளி அருகே உள்ள கங்காவரத்தைதச் சோ்ந்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு திமுக நிா்வாகிகள் தயாராக வேண்டும்

ஒசூா்: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் செய்யும் பணிக்கு திமுக நிா்வாகிகள் அனைவரும் தயாராக வேண்டும் என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.கிருஷ்ணகிரி மே... மேலும் பார்க்க