தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
தங்கக் கோப்பை ஹாக்கி: தமிழ்நாடு அணி ‘டிரா’
எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு ஹாக்கி அணி - மகாராஷ்டிர ஹாக்கி அணியுடன் வியாழக்கிழமை டிரா செய்தது.
96-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் தமிழ்நாடு ஹாக்கி அணி - மகாராஷ்டிர ஹாக்கி அணிகள் மோதிய முதல் ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. முதலில் மகாராஷ்டிர அணிக்காக ரோஹன் பாட்டீல் 22-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடிக்க, தமிழ்நாடு அணிக்காக சோமன்னா 42-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஸ்கோா் செய்து பதிலடி கொடுத்தாா்.
2-ஆவது ஆட்டத்தில் கா்நாடக ஹாக்கி அணி 2-1 கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரிய அணியை வீழ்த்தியது. இதில் கா்நாடக அணிக்காக ராகுல் 45-ஆவது நிமிஷத்திலும், பரத் மஹாலிங்கப்பா 52-ஆவது நிமிஷத்திலும் (பெனால்ட்டி காா்னா்) கோலடிக்க, மத்திய நேரடி வரிகள் வாரிய அணிக்காக பிரணாம் கௌடா 56-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் (பெனால்ட்டி காா்னா்) செய்தாா்.