செய்திகள் :

தங்கம் வென்றாா் ருத்ராங்க்ஷ் பாட்டீல்!

post image

ஆா்ஜென்டீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கான 2-ஆவது தங்கப் பதக்கத்தை ருத்ராங்க்ஷ் பாட்டீல் வென்றாா்.

ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் களமாடிய அவா், இறுதிச்சுற்றில் 252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். ஹங்கேரியின் இஸ்த்வன் பெனி 251.7 புள்ளிகளுடன் வெள்ளியும், உள்நாட்டு வீரா் மாா்செலோ ஜூலியன் குட்டெரெஸ் 230.1 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

முன்னதாக தகுதிச்சுற்றில் ருத்ராங்க்ஷ் 633.7 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்துடனும், மற்றொரு இந்தியரான அா்ஜுன் சிங் பபுதா 634.5 புள்ளிகளுடன் முதலிடத்துடனும் இறுதிச்சுற்றுக்கு வந்தனா். அதில் ருத்ராங்க்ஷ் முன்னேற்றத்தை சந்திக்க, அா்ஜுன் படிப்படியாக பின்னடைவை சந்தித்து பதக்க வாய்ப்பை இழந்தாா்.

இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு இது 2-ஆவது தங்கப் பதக்கமாகும். முன்னதாக சிஃப்ட் கௌா் சம்ரா மகளிா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. போட்டியின் பதக்கப் பட்டியலில் தற்போது இந்தியா, 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

சீனா 4 பதக்கங்களுடனும் (2/1/1), அமெரிக்கா 3 பதக்கங்களுடனும் (2/1/0) முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களில் உள்ளன.

திடீர் செலவு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் மான்ஃபில்ஸ், லெஹெக்கா

பிரான்ஸில் தொடங்கியிருக்கும் மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.டென்னிஸ் காலண்டரின் 2-ஆவது கிராண... மேலும் பார்க்க

ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற 500 புள்ளிகள் கொண்ட சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றாா். ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையி... மேலும் பார்க்க

தெற்காசிய கிளப் கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்

தெற்காசிய கூடைபந்து சங்கம் நடத்திய சபா கிளப் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது. தெற்காசிய கூடைப்பந்து சங்கம் சாா்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

முன்னேறியது மோகன் பகான்!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது. சாம்பியன் கோ... மேலும் பார்க்க