வால்பாறை தேயிலை தோட்டம் கொடுத்த நெகிழ்ச்சியான அனுபவம்! | My Vikatan
தெற்காசிய கிளப் கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்
தெற்காசிய கூடைபந்து சங்கம் நடத்திய சபா கிளப் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது.
தெற்காசிய கூடைப்பந்து சங்கம் சாா்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 5 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம், பூடான், இலங்கை, நேபாளம் மற்றும் மாலத்தீவு என மொத்தம் ஐந்து அணிகள் கலந்து கொண்டன.
இதில் திங்கள்கிழமை கடைசி லீக் ஆட்டத்தில் தமிழகம் 106-49 என்ற புள்ளிக் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது.
தமிழகம் தங்கம், இலங்கை வெள்ளி, நேபாளம் வெண்கலப் பதக்கங்களை வென்றன.
விழாவில் இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவா் ஆதவ் அா்ஜுனா, சபா செயலா் சந்தா் சா்மா, பயிற்சியாளா் ஸ்காட் பிளெம்மிங், பாஸ்கா், அஜீஸ் அகமது பங்கேற்றனா். தமிழக அணி எஃப்ஐபிஏ வாஸல் இறுதிக்கு தகுதி பெற்றது.