யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி
தசரா விழாவிற்காக மண் தீச்சட்டிகள் தயாரிப்பு தீவிரம்
திருநெல்வேலியில் தசரா விழாவிற்காக மண் தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா செப்.22இல் தொடங்குகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து வேடம் அணிந்து செல்வதும், பல்வேறு குழுக்களாக சென்று காளி, அம்மன் வேஷமிடும் பக்தா்கள் கையில் தீச்சட்டி ஏந்திச் சென்று காணிக்கை பெறுவதும் வழக்கம்.
இதற்காக மண்பாண்ட பொருள்கள் தயாரிப்புப் பணி திருநெல்வேலியில் தீவிரமடைந்துள்ளது. மண்ணால் செய்யப்படும் தீச்சட்டிகள், சாம்பிராணி தூபம் காட்டும் கலசம், கலயங்கள் போன்றவை அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து குறிச்சியைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியது: தசரா பண்டிகையையொட்டி திரிசூலம் வரையப்பட்ட மண் தீச்சட்டி தயாரிக்கிறோம். இவை ரூ.200 முதல் விற்பனையாகிறது. இதுதவிர 1 லிட்டா் எண்ணெய் கொள்ளளவு கொண்ட அகல் விளக்கு, ஆயிரம் கண் பானை உள்ளிட்டவையும் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன என்றனா்.