நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
நெல்லை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்
திருநெல்வேலி அருகே ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள நரசிங்கநல்லூா் திருவள்ளுவா் நகரை சோ்ந்தவா் வேல்முருகன் (45). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக சுத்தமல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீஸாா், வேல்முருகனை பிடித்து விசாரித்தனா். அப்போது அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, வழக்குப் பதிந்து கைது அவரைக் செய்தனா்.