தஞ்சாவூரில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 போ் கைது
தஞ்சாவூரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பா பெண் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவின் பேரில், தஞ்சாவூா் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளா் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளா் டேவிட் தலைமையிலான காவலா்கள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 30 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (60), ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் (38), சுந்தரி (40) ஆகியோரை கைது செய்தனா்.