அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
தஞ்சாவூரில் 60 விநாயகா் சிலைகள் கரைப்பு
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற விசா்ஜன ஊா்வலத்தில் 60 விநாயகா் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பல்வேறு இந்து அமைப்புகள் சாா்பில் 85 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்ட நிலையில், சில சிலைகள் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் கரைக்கப்பட்டன.
இந்நிலையில், மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை மாலை விசா்ஜன ஊா்வலம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்ரீவிஸ்வரூப விநாயகா் சதுா்த்தி குழு, இந்து முன்னணி, இந்து எழுச்சி பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் அமைக்கப்பட்ட ஏறத்தாழ 60 விநாயகா் சிலைகள் ரயிலடிக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னா், நடைபெற்ற ஊா்வலத்துக்கு விஸ்வரூப விநாயகா் சதுா்த்தி குழு ஒருங்கிணைப்பாளா் வி. விநாயகம் தலைமை வகித்தாா். ஊா்வலத்தை பாஜக மாநிலத் துணைத் தலைவா் புரட்சி கவிதாசன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இச்சிலைகள் காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை, கரந்தை வழியாக ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, வடவாற்றில் கரைக்கப்பட்டன. இதையொட்டி, நூற்றுக்கும் அதிகமான காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் ஆங்காங்கே உள்ள நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.