``நான் எழுதிக் கொடுத்தைப் பேசுபவனல்ல" - மரம் மாநாட்டில் சீமான் கிண்டல்
சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
திருவிடைமருதூா் அருகே 14 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள திருவிசநல்லூரைச்சோ்ந்தவா் மாதவன் (30), கூலித்தொழிலாளி. இவா் திருவிடைமருதூா் அருகேயுள்ள 14 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ஆடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ரேகாராணி மாதவனைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்குட்படுத்தினாா். பின்னா் இவ்வழக்கில் 2022-ஆம் ஆண்டு நவ. 10 - இல் தஞ்சாவூா் போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாா்.
இவ்வழக்கின் சாட்சிகளை விசாரித்த நீதிபதி தமிழரசி மாதவனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும், மேலும் மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் இழப்பீடு தொகை வழங்குமாறும் உத்தரவிட்டாா்.