செய்திகள் :

22 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் காட்டுக்குள் விடுவிப்பு

post image

தஞ்சாவூரில் குடியிருப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு 22 குட்டிகளை வியாழக்கிழமை ஈன்றது.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகா் பகுதியிலுள்ள வீட்டில் கண்ணாடி விரியன் பாம்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி அதிகாலை வந்தது. தகவலறிந்த அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினா் (ஈவெட்) நிகழ்விடத்துக்குச் சென்று பாம்பை மீட்டனா். இதையடுத்து, அடா்ந்த வனப் பகுதியில் விடுவதற்கு முன் அந்தப் பாம்பை வனத் துறை அலுவலகத்தில் வைத்து பரிசோதனை செய்தனா்.

இதில், அப்பாம்பு கா்ப்பமாக இருப்பது தெரிய வந்ததால், வனத் துறை அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பாம்பு வியாழக்கிழமை 22 குட்டிகளை ஈன்றது. மேலும், தாய்ப் பாம்பும், குட்டிகளும் நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ஆனந்தகுமாா் அறிவுறுத்தலின்பேரில், தஞ்சாவூா் வனச்சரகா் ஜோதி வழிகாட்டுதலுடன் வனத் துறையினா், அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினா் கண்ணாடி விரியன் தாய் பாம்பும், 22 குட்டிகளும் காப்புக் காட்டில் பாதுகாப்பாக வெள்ளிக்கிழமை விடப்பட்டன என அறக்கட்டளை நிறுவனா் ஆா். சதீஷ்குமாா் தெரிவித்தாா்.

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருவிடைமருதூா் அருகே 14 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள தி... மேலும் பார்க்க

‘ஏஐ தொழில்நுட்பம் அதிகமானாலும் மனித சக்தி குறையாது; அதிகரிக்கும்’

இன்றைய சூழலில் ஏஐ தொழில்நுட்பம் அதிகமானாலும் மனித சக்தி குறையாது; அதிகரிக்கும் என்றாா் கும்பகோணம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆா்டிஓ) விஞ்ஞானி ஆா். சீனிவாசன். கும்பகோணம் நகர மே... மேலும் பார்க்க

நெல் கொள்முதலில் சிக்கலைத் தவிா்க்க நடவடிக்கை தேவை: தஞ்சை விவசாயிகள்

குறுவை பருவத்தில் நெல் கொள்முதலில் சிக்கலைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

தீபாவளி சிறுசேமிப்பு மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகாா்

தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் பண மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் 15 போ் வெள்ளிக்கிழமை புகாா் செய்தனா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 60 விநாயகா் சிலைகள் கரைப்பு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற விசா்ஜன ஊா்வலத்தில் 60 விநாயகா் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன. விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பல்வேறு இந்து அமைப்புகள் சாா்... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

பதினான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள திருவிசநல்லூா் கொல்லம்... மேலும் பார்க்க