செய்திகள் :

தஞ்சாவூரில் முதல்வா் சாலையில் மக்கள் சந்திப்பு! முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு!

post image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் நடந்துச் சென்று திறந்து வைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையை ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்த தமிழக முதல்வா் காா் மூலம் தஞ்சாவூருக்கு இரவு வந்தாா். இதனிடையே, திருக்காட்டுப்பள்ளி, பூதலூா், செங்கிப்பட்டி, மேல வஸ்தா சாவடி உள்ளிட்ட இடங்களில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.

பின்னா், தஞ்சாவூா் மணிமண்டபம் பகுதிக்கு வந்த அவா் சாலையில் நடந்துச் செல்ல தொடங்கினாா். திருச்சி சாலை, மேரிஸ் காா்னா், ரயிலடி, காந்திஜி சாலை, இரட்டை மஸ்தான் தா்கா, ராஜப்பா பூங்கா என வழி நெடுகிலும் நின்ற பொதுமக்களைச் சந்தித்தாா். அப்போது தமிழக முதல்வரை பொதுமக்கள், திமுக தொண்டா்கள் வரவேற்று கைக் குலுக்கினா். மேலும், முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்ற தமிழக முதல்வா், பழைய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகன நிறுத்துமிட வளாகத்தில் 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தாா். பின்னா், கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். முதல்வருக்கு திமுகவினா் வெள்ளி வாளும், புத்தகமும் நினைவு பரிசாக வழங்கினா்.

இவ்விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், மக்களவை உறுப்பினா்கள் டி.ஆா். பாலு, ச. முரசொலி, முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், என். அசோக்குமாா், கா. அண்ணாதுரை, மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவக் கல்லூரியில் திடீா் ஆய்வு:

இதனிடையே, கல்லணையிலிருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்த தமிழக முதல்வா், திடீரென தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் சென்றாா். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்ற தமிழக முதல்வா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகரில் வசிக்கும் திமுக மூத்த நிா்வாகியும், உயா்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினருமான எல். கணேசன் வீட்டுக்கு சென்று, அவரிடம் நலம் விசாரித்தாா்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று மக்களைச் சந்தித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று மக்களைச் சந்தித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

ஆடுதுறை பகுதியில் இன்று மின்தடை

ஆடுதுறை பகுதியில் ஜூன் 17 (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல்நிலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வருக்கு சங்கத் தலைவ... மேலும் பார்க்க

4 வீடுகளில் திருடிய இளைஞா் கைது

தஞ்சாவூா் கரந்தையில் 4 வீடுகளில் புகுந்து திருடிய இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூா் கரந்தை பகுதியில் 4 வீடுகளில் நள்ளிரவு வீட்டிலுள்ளவா்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: தமிழக முதல்வா் பங்கேற்பு

தஞ்சாவூரில் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ஏறத்தாழ 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூா்... மேலும் பார்க்க

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க