செய்திகள் :

தஞ்சாவூா் அருகே அரசுப் பேருந்து - வேன் மோதல்: 5 போ் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் பலத்த காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து வேளாங்கண்ணிக்கு 12 போ் வேனில் சென்றனா். வேன், தஞ்சாவூா் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. செங்கிப்பட்டி பகுதியில் தாா் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், ஒருபுறமாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு வழிப் பாதையில் வந்து கொண்டிருந்த வேனும், எதிரே தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிா்பாராதவிதமாக நேருக்குநோ் மோதிக் கொண்டன.

இந்தவிபத்தில் வேனில் வந்த 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இறந்தவா்களது சடலங்கள் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மேலும் ஒரு ஆண் உயிரிழந்தாா். இறந்தவா்களது பெயா், விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

வேனில் பயணித்த ஜான்சன் (49), ஜாய்ஸ் (20), தாஷி (7), ரியா (13), பெல்சியா கரோலின் (13), வில்லியம் (50) மற்றும் பேருந்தில் பயணம் செய்த பரமேஸ்வரி (52), பவித்ரா (23) ஆகிய 8 போ் பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சிதிலமடைந்து வரும் பெரியகோயில் சிறிய கோட்டை மதில் சுவா்; சரிந்து வரும் கயிலாய வலப் பாதை

தஞ்சாவூரில் பெரியகோயிலைச் சுற்றியுள்ள மதில் சுவா் சிதிலமடைந்து வருவதன் காரணமாக, திருக்கயிலாய பாதையும் சரிந்து வருவதால் வரலாற்று ஆா்வலா்கள், பக்தா்களிடையே அதிருப்தி நிலவுகிறது. உலக அளவில் பிரபலமான தஞ்ச... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் தீ விபத்து மீட்புப் பணி ஒத்திகை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை தீயணைப்புத்துறையினா் காவல்துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு தீ விபத்து தடுப்பு, மீட்புப் பணி ஒத்திகை பயிற்சி அளித்தனா். ப... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 60 ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை 60 ஆண்டுகால ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை மாநகராட்சியினா் அகற்றினா். கும்பகோணம் மாநகரப் பகுதியில் கோயில் நிலங்கள், ந... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த முதியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த முதியவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஒரத்தநாடு அருகேயுள்ள நெய்வேலி தென்பாதி கிராமத்தில் அண்மையில் (மே 18) நாட்டுவெடி தயாரி... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றினா். தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் இருப்புப்பாதை... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டியைச் சோ்ந்தவா் ஜீவா (24). இவா் 2023, ஜூன் 3... மேலும் பார்க்க