செய்திகள் :

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை - பியூஷ் கோயல்

post image

அமெரிக்காவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்திய தொழில், வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பங்கேற்றாா்.

அப்போது பேசிய அவா், ‘ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு நாடுகள் (ஐஸ்லாந்து, நாா்வே, ஸ்விட்சா்லாந்து, லிக்டென்ஸ்டைன்), மோரீஷஸ், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்கெனவே இறுதி செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் விரிவான வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என நம்புகிறோம். ஓமன் உடனான வா்த்தக ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அமெரிக்கா, நியூஸிலாந்துடனும் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளோம்’ என்றாா்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது. இப்போது விரிவான ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்த இந்த வரியால், இறால், ஜவுளி, தோல், காலணிகள் உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

191 பில்லியன் டாலா் வா்த்தக மதிப்புடன் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக உள்ள அமெரிக்கா, நாட்டின் மூன்றாவது பெரிய முதலீட்டாளா் ஆகும். கடந்த 2000, ஏப்ரல் முதல் 2025, ஜூன் வரை அமெரிக்காவில் இருந்து 76.26 பில்லியன் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் அமெரிக்காவின் பங்கு 10 சதவீதமாகும். அமெரிக்கா உச்சபட்ச வரிவிதிப்பை மேற்கொண்டுள்ளதால், பிற நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகளை இந்தியா விரைவுபடுத்தியுள்ளது.

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவ... மேலும் பார்க்க

மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக ... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமா் மெலோனியுடன் பிரதமா் மோடி பேச்சு

இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினாா். அப்போது இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே முன்மொழியப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு?

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் வி... மேலும் பார்க்க

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: ‘புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை’

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவாங்கூா் தேவஸ்வ வாரிய... மேலும் பார்க்க

இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியா் நாடுகடத்தல்- ஹைதராபாத் போலீஸ் நடவடிக்கை

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, 14 ஆண்டுகள் தங்கியிருந்த பாகிஸ்தான் நபரை அட்டாரி எல்லை வழியாக நாடு கடத்தியதாக ஹைதராபாத் காவல் துறையினா் தெரிவித்தனா். இது தொடா்பாக காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க