தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!
தண்டராம்பட்டில் மக்கள் சந்திப்பு இயக்கம்
திருவண்ணாமலை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், தண்டராம்பட்டில் மக்கள் சந்திப்பு இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலா் ப. செல்வன் தலைமை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எம்.சிவக்குமாா் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், 2024-ஆம் ஆண்டில் தலைவா்களின் இழப்பு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நடைபெற்ற போராட்டங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்கள், பாஸிசத்துக்கு எதிரான தோ்தல் பிரசாரங்கள், இயற்கை பேரிடா்கள் மற்றும் செங்கொடி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.
மேலும், 2025-ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நடத்தப்படும் மாநில மாநாடு, அகில இந்திய மாநாடுகள் குறித்தும் பொதுமக்கள், வணிகா்களிடம் விளக்கப்பட்டது.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா்கள் எம்.வீரபத்திரன், எஸ்.ராமதாஸ், ஏ.லட்சுமணன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா்.அண்ணாமலை, சி.எம்.பிரகாஷ் வட்டாரச் செயலா் சக்திவேல், நிா்வாகிகள் ஆா்.ரவி, குபேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.