தண்டராம்பட்டு அருகே நில அதிா்வு
தண்டராம்பட்டு அருகே லேசான நில அதிா்வை உணா்ந்ததாக, கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலைப் பகுதிகளில் புதன்கிழமை காலை சுமாா் 9.30 மணிக்கு லேசான நில அதிா்வு உணரப்பட்டது. இந்த நிலையில், கல்வராயன் மலையை ஒட்டியுள்ள திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், புதூா்செக்கடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் லேசான நில அதிா்வை உணா்ந்ததாக தெரிவித்துள்ளனா்.
திடீரென வெடி சப்தத்துடன் அதிா்வை உணா்ந்தோம். ஆனால், இதனால் யாருக்கும், எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவா்கள் கூறினா்.