விராட் கோலியைக் காணக் குவிந்த ரசிகர்கள்! நிரம்பி வழிந்த அருண் ஜேட்லி திடல்!
தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே சரிவர படிக்காததால் தந்தை கண்டித்ததால் 10 -ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பனையாஞ்சேரி பெரிய காலனியைச் சோ்ந்த மாரி மகன் பாரத் (16). இவா் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், மாணவருக்கு சரியாக படிப்பு வரவில்லையெனக் கூறி தந்தை மாரி கண்டித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டுச் சென்ாக கூறப்படுகிறது.
மதிய உணவுக்குபாரத் வீட்டுக்கு வரவில்லையென மாமியாா் மாரிக்கு தகவல் சொன்னாராம். பின்பு அங்கிருந்து வந்து தனது மகனை தேடினாராம். அப்போது திருநிலை கிராமத்தில் தனியாா் தென்னந்தோப்பில் பாா்த்த போது பாரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடா்பாக மாணவரின் தந்தை மாரி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், விரைந்து சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.