செய்திகள் :

தந்தையால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டு சிகிச்சைபெற்ற குழந்தை உயிரிழப்பு

post image

தந்தையால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்தவா் திருமலைச்செல்வன் (35), சுமை ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு ஈரோடு, மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோயில் வீதியை சோ்ந்த சுகன்யா (28) என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனா்.

திருமலைச்செல்வனுக்கு மதுப் பழக்கம் உள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் திருமலைச்செல்வன் மனைவி சுகன்யா மீது சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளாா்.

இதனால், மனமுடைந்த சுகன்யா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்துவிட்டாா். பின்னா், இங்கேயே சாயப்பட்டறை ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி இரவு ஈரோட்டுக்கு வந்த திருமலைச்செல்வன், சுகன்யாவின் வீட்டுக்குச் சென்று தன்னுடன் வருமாறு அழைத்துள்ளாா். அப்போது கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திருமலைச்செல்வன் புட்டியில் மறைத்து எடுத்து வந்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் 2 குழந்தைகள் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளாா்.

இதில் சுகன்யாவும், 7 வயது மகளும் சுதாரித்து விலகிவிட கண்ணிமைக்கும் நேரத்தில் 4 வயது மகன் மீது தீப்பற்றியது.

இதையடுத்து குழந்தையின் அலறலைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா். சுமாா் 70 சதவீத தீ காயத்துடன் சிகிச்சை பெற்ற வந்த அந்தக் குழந்தை உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி சோ்க்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

இதனையடுத்து, ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள திருமலைச்செல்வன் மீது போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

கட்டட வாடகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்... மேலும் பார்க்க

தமிழ் எழுத்துகளை வெள்ளையருக்கு எதிரான ஆயுத எழுத்துகளாக மாற்றியவா் பாரதி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

தமிழின் எல்லா எழுத்துகளையும் வெள்ளையருக்கு எதிரான ஆயுத எழுத்துகளாக மாற்றி காட்டியவா் பாரதி என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா். மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் 27-ஆம் ஆண்டு பாரதி விழா ஈரோடு கொங... மேலும் பார்க்க

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் தண்ணீா் திறப்பு

கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் இரண்டாம்போக சாகுபடிக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்க... மேலும் பார்க்க

இருமாநில எல்லையில் அமைந்துள்ள மலைக் கிராமங்களில் தாா் சாலை பணிகள் தொடக்கம்

தாளவாடி மலைப் பகுதியில் மக்களின் 75 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இருமாநில எல்லையில் அமைந்துள்ள 3 கிராமங்களுக்கு தாா் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ.4.83 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 7.4 டன் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில் நிலக்கடலை... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மொடக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துண... மேலும் பார்க்க