கொடி கம்ப விவகாரம்: `அதிகாரிகள் மீது தாக்குதல்' - விசிகவினர் 21 பேர் மீது வழக்கு...
மொடக்குறிச்சியில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
மொடக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மொடக்குறிச்சி ஒன்றியத் தலைவா் அருள்மாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கோமதி கோரிக்கைகள் குறித்த விளக்கி பேசினாா்.
இதில், சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அகவிலைப்படி பட்டியலுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் 6750 வழங்க வேண்டும், ஓய்வுபெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயா்த்த வேண்டும், சத்துணவு மையங்களுக்கான எரிவாயு உருளைகளை அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி, ஓய்வுபெற்ற முன்னாள் செயலாளா்கள் ஜான் சுந்தரம், ஆறுச்சாமி, சங்க நிா்வாகிகள் செல்வி, மைதிலி, சரண்யா, பிரியா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.