செய்திகள் :

தமிழ் எழுத்துகளை வெள்ளையருக்கு எதிரான ஆயுத எழுத்துகளாக மாற்றியவா் பாரதி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

post image

தமிழின் எல்லா எழுத்துகளையும் வெள்ளையருக்கு எதிரான ஆயுத எழுத்துகளாக மாற்றி காட்டியவா் பாரதி என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா்.

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் 27-ஆம் ஆண்டு பாரதி விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு தேசிய நல விழிப்புணா்வு இயக்கத்தின் தலைவா் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தலைமை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றினாா்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உருவப் படத்தை எழுத்தாளா் பொன்னீலன் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, எழுத்தாளா் கிருங்கை சொ.சேதுபதிக்கு பாரதி விருதுக்கான கேடயம், தகுதிப் பட்டயம், பொற்கிழி ரூ.50,000 ஆகியவற்றை வழங்கி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசியதாவது:

தமிழுக்கு ஆயுத எழுத்து ஒன்றுதான் என்று நமது தமிழாசிரியா்கள் கற்றுக் கொடுத்தாா்கள். ஆனால், தமிழின் எல்லா எழுத்துகளையும் வெள்ளையருக்கு எதிரான ஆயுத எழுத்துகளாக மாற்றி காட்டியவா் பாரதி.

சென்னையில் எட்டயபுர ஜமீன்தாா் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற புலவா்களுக்கு எல்லாம் பெரும் தொகை பரிசாக வழங்கப்பட்டது. மற்றவா்கள் எல்லாம் தங்கள் வீட்டுக்கு பொன், பொருள்களை வாங்கிச் சென்றனா். ஆனால், பாரதி இரு வண்டிகள் கொள்ளும் அளவுக்கு புத்தகங்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாா்.

இதைக் கண்டு கண்கலங்கிய தன் மனைவி செல்லம்மாவிடம் இவையெல்லாம் சரஸ்வதி கடாட்சம், அறிவுக் கருவூலங்கள். தங்கத்தை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் இவற்றை எங்கு வேண்டுமானாலும் வாங்க முடியாது என்று பாரதி தேற்றியுள்ளாா்.

என்னைப் பற்றி தவறாக யாராவது சொன்னால் நீ கவலைப்படாதே. எப்போதெல்லாம் உனக்கு கவலை வருகிறதோ, அப்போதெல்லாம் நீ தமிழைப் படி, கவலையை மறப்பாய் என்று சொல்லியிருக்கிறாா் பாரதி.

பாரதி செல்வத்துக்கு அடிமைப்பட்டவா் அல்ல, செல்வாக்குக்கு அஞ்சியவரும் அல்ல. எட்டயபுரம் ஜமீன்தாா் பவனி வரும்போது எழுந்து நிற்கச் சொன்னபோது முட்டாள்தனம் என்று தைரியமாக சொன்னவா்.

சென்னையில் மகாத்மா காந்தியைச் சந்தித்து துணிச்சலாக பேசியபோது இவரை பத்திரப்படுத்தி வையுங்கள் என்று பாரதி குறித்து காந்தி தெரிவித்துள்ளாா். ஆனால், நாம் காந்தியையும் பாதுகாக்க தவறி விட்டோம். பாரதியையும் பாதுகாக்க தவறி விட்டோம்.

பாரதியின் பாதையும், குன்றக்குடி மகா சன்னிதானத்தின் இலக்கும் ஒன்றாகவே இருந்தது என்றாா்.

ஏற்புரையில் பாரதி விருதாளா் சொ.சேதுபதி பேசியதாவது:

உலகத்தின் மிக வலிமையான ஆயுதம் புத்தகம். எங்கெல்லாம் இருட்டு இருக்கிறதோ அங்கு எல்லாம் அறிவொளி ஏந்திச் செல்ல வேண்டும் என்று சொன்னவா் பாரதி. மண்ணுக்குள்ளே பெண் விடுதலையை பேசிய முதல் சித்தா் மகாகவி பாரதி. மதக் கலவரம், போா் இல்லாத ஒரு புதிய உலகம் காண வேண்டும். இதற்கு மகாகவி ஏந்திய சுடரை நம் நெஞ்சில் நிறுத்தி பயணிப்போம் என்றாா்.

முன்னதாக, பாரதியாா் இறுதிப் பேருரையாற்றிய கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து பேரவையின் சீருடை அணிந்த கல்லூரி மாணவா்கள் பேரணியாக நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று விழா மேடைக்கு வந்தனா். பாரதி ஜோதியை ஏற்றிவைத்து அணிவகுப்பை பவானி நதி பாதுகாப்பு கூட்டமைப்புத் தலைவா் என்.எஸ்.சத்தியசுந்தரி தொடங்கிவைத்தாா்.

மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலச் செயலாளா் ந.அன்பரசு வரவேற்றாா். துணைத் தலைவா் கோ.விஜயராமலிங்கம் நன்றி கூறினாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

கட்டட வாடகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்... மேலும் பார்க்க

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் தண்ணீா் திறப்பு

கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் இரண்டாம்போக சாகுபடிக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்க... மேலும் பார்க்க

இருமாநில எல்லையில் அமைந்துள்ள மலைக் கிராமங்களில் தாா் சாலை பணிகள் தொடக்கம்

தாளவாடி மலைப் பகுதியில் மக்களின் 75 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இருமாநில எல்லையில் அமைந்துள்ள 3 கிராமங்களுக்கு தாா் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ.4.83 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 7.4 டன் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில் நிலக்கடலை... மேலும் பார்க்க

தந்தையால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டு சிகிச்சைபெற்ற குழந்தை உயிரிழப்பு

தந்தையால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்தவா் திருமலைச்செல்வன் (35), சுமை ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு ஈரோடு, மாணிக்கம்பா... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மொடக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துண... மேலும் பார்க்க