தனியாா் கரும்புத் தோட்டத்தில் தீ
போடியில் செவ்வாய்க்கிழமை கரும்புத் தோட்டத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனா்.
தேனி மாவட்டம், போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் தீா்த்தத் தொட்டி அருகே, தனியாருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திடீரென தீப்பிடித்தது.
இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில் கரும்பு பயிா்கள் எரிந்து நாசமானது.