மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
தேனியில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு, திமுக மாணவா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேனித் தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், போடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன், தேனி நகா் திமுக செயலா் நாராயணபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதோடு, தமிழகத்துக்கு நிதி வழங்காமல் புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து பதாகைகளை ஏந்தி பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
மாணவா் நிதியளிப்பு: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழக அரசுக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு புறக்கணித்து வரும் நிலையில், முத்துத்தேவன்பட்டியைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு மாணவா் கிருஷ்ணபிரியன் (10) தனது உண்டியல் சேமிப்புத் தொகை ரூ.5,000-ஐ, தமிழக முதல்வரின் நிதிக்கு தேனி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனிடம் வழங்கினாா்.