பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
கொடைக்கானல் சாலை, டம்டம் பாறை பகுதியில் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரம், டி.வி.ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் பூபதி மகன் சதீஷ்குமாா் (27). பால் வியாபாரி. சதீஷ்குமாரின் மனைவி தேவியின் (23) சொந்த ஊா் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை.
இங்குள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்று விட்டு, அங்கிருந்து சதீஷ்குமாா் இரு சக்கர வாகனத்தில் திரும்பினாா். அப்போது, டம்டம் பாறை பகுதியில் எதிா் திசையிலிருந்து வந்த டிப்பா் லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் சதீஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து லாரி ஓட்டுநா் ராஜாராம் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.