ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
கஞ்சா விற்பனை வழக்கில் ஆந்திர இளைஞா் கைது
தேனி மாவட்டப் பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்பனை செய்தவா்களை கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் பாா்த்திபன், உதவி ஆய்வாளா்கள் கதிரேசன், மணிகண்டன், இளையராஜா ஆகியோா் கொண்ட தனிப் படை அமைத்து போலீஸாா் தேடி வந்தனா்.
இதில் தேவதானப்பட்டி, கூடலூா் ஆகிய பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், சிலக்கல்லூரி பேட்டை, சுரவரிபள்ளத்தைச் சோ்ந்த நகூலுமீரா மகன் சேக் மகபு சுபானியை (33) தனிப் படை போலீஸாா் கைது செய்து, கூடலூா் வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
கடந்த 2 மாதங்களில் தேனி மாவட்டப் பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஆந்திரத்தைச் சோ்ந்த 4 பேரை தனிப் படை போலீஸாா் கைது செய்துள்ளனா்.