தனியாா் பள்ளி விடுதி சமையலா் போக்ஸோவில் கைது
கடம்பூா் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தனியாா் பள்ளியின் விடுதி சமையலா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில், துறையூா் ஆா்.சி. சா்ச் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஏ.சுரேஷ் (42) என்பவா் சமையலராகப் பணியாற்றினாா். அவா் விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் ஐசக் தேவராஜ் புகாா் அளித்தாா்.
இதனையடுத்து சமையலா் சுரேஷ் மீது, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.