தனுஷ் - 54 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
நடிகர் தனுஷ் - விக்னேஷ் ராஜா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
நடிகர் தனுஷ் இறுதியாக நடித்த குபேரா திரைப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தெலுங்கில் வெற்றிப் படமானது. வணிக ரீதியாகவும் ரூ. 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அடுத்ததாக, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடிக்க உள்ளார். தனுஷின் 54-வது படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பருத்தி தோட்டத்தில் தீ பிடிக்க, தனுஷ் நின்றுகொண்டிருக்கும் போஸ்டர் ரசிகர்களிடம் படத்தின் மீதான ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதையும் படிக்க: உலகத்தரமான அனிமேஷன்... மகாவதாரம் நரசிம்மா டிரைலர்!