செய்திகள் :

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 அதிகாரிகள் நியமனம்!

post image

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், கீழ்க்கண்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.

அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

1. ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியம்.

  • எரிசக்தித் துறை

  •  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

  •  போக்குவரத்துத் துறை

  •  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

  •  வெளிநாடு வாழ் தமிழர் நலன்

  •  பள்ளிக் கல்வித் துறை

  •  உயர்கல்வித் துறை

  •  கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை

  •  மனிதவள மேலாண்மைத் துறை

2. ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

  • ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை

  • கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

  • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

  • நீர்வளத் துறை

  • சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை

  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

  • தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

  • இயற்கை வளங்கள் துறை

3. தீரஜ் குமார், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.

  • உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

4. அமுதா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை.

  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

  •  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

  •  மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

  •  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

  •  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

  •  பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்

    சிறுபான்மையினர் நலத்துறை

  •  வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை

  •  நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை

  •  சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

  •  சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள்.

அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.

அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Minister M.K. Stalin has ordered the appointment of 4 senior IAS officers as spokespersons for the Tamil Nadu government.

இதையும் படிக்க : நடிகை சரோஜா தேவி காலமானார்!

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி: கமல்

மூத்த நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வால் இன்று(திங்கள்கிழமை) காலை காலமானார்.பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வய... மேலும் பார்க்க

பிடிவாரண்ட் வழக்குகள் எத்தனை நிலுவை? காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேப்பனப்பள்ளியை அடுத்த பில்லன குப்பம், கே.திப்பனப்பள்ளி கிராமம் சிவசக்தி நகரைச் சே... மேலும் பார்க்க

வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட... மேலும் பார்க்க

தமிழக எம்.பி.-எம்எல்ஏக்களின் ஊழல் வழக்கு: விவரங்களைக் கோரி தவெக மனு!

தமிழகத்தில் உள்ள எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 5.55 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ... மேலும் பார்க்க