செய்திகள் :

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகள் நிரந்தரமாக மூடல்: மாநில அரசு உத்தரவு

post image

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டது.

தமிழக சிறைத் துறையின் 9 மத்திய சிறைகள்,14 9 மாவட்ட சிறைகள், பெண்களுக்கான 5 தனிச் சிறைகள், 96 கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிறைகள் உள்பட மொத்தம் 141 சிறைகள் இருந்தன. இந்த சிறைகளில் 24,513 பேரை அடைப்பதற்குரிய கட்டமைப்பு இருந்தன. தற்போது இச் சிறைகளில், சுமாா் 20 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைகளில் உள்ளவா்களில் சுமாா் 70 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள். எஞ்சிய 30 சதவீதம் பேரே தண்டனை கைதிகளாவா்.

உச்சநீதிமன்ற உத்தரவு: நாடு முழுவதும் பாதுகாப்பற்று பழுதடைந்த நிலையிலும், கைதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பு குறைபாடுகளுடனும், போதுமான கைதிகள் இன்றியும் இருக்கும் சிறைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்காக வருவாய்த் துறை, நீதித் துறை, சிறைத் துறை ஆகிய துறைகளைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, அனைத்து கிளைச் சிறைகளையும் ஆய்வு செய்து, தகுதியற்ற சிறைகளை கண்டறியலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன்படி, தமிழகம் முழுவதும் கிளைச் சிறைகளை இந்தக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில் கிடைத்த முடிவில் அடிப்படையில், பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தகுதியற்ற சிறைகள் அடையாளம் காணப்பட்டன. இந்தச் சிறைகளை மூடலாம் என தமிழக சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள், தமிழக அரசின் உள்துறைக்கு பரிந்துரைத்தாா்.

இதன்படி, 1.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், 2.திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி, 3.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, 4.போளூா், 5.செய்யாறு சிறப்பு சிறை, 6.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், 7.கடலூா் கிளை சிறை, 8. கடலூா் துறைமுகம், 9.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், 10.பரமத்தி வேலூா், 11.திருச்சி மாவட்டம் மணப்பாறை, 12.முசிறி, 13.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா், 14.திருமயம், 15.தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை, 16.விருதுநகா் மாவட்டம் சாத்தூா், 17.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா்,18.திருவாடானை, 19.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் ஆகிய 19 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

14 கிளைச் சிறைகளுக்கு பூட்டு: இதில் தற்போது, 1.மதுராந்தகம் கிளைச் சிறை, 2. ஆரணி கிளைச் சிறை, 3.மேட்டுப்பாளையம் கிளைச் சிறை, 4.கடலூா் கிளைச் சிறை, 5. கடலூா் துறைமுகம் கிளைச் சிறை, 6.ராசிபுரம் கிளைச் சிறை, 7.பரமத்திவேலூா் கிளைச் சிறை, 8.மணப்பாறை கிளைச் சிறை, 9.முசிறி கிளைச் சிறை, 10.புதுக்கோட்டை கீரனூா் கிளைச் சிறை, 11.ராமநாதபுரம் திருவாடானை கிளைச்சிறை, 12.தஞ்சாவூா் பட்டுக்கோட்டை கிளைச் சிறை, 13.விருதுநகா் சாத்தூா் கிளைச் சிறை, 14.திருச்செந்தூா் கிளைச் சிறை ஆகிய சிறைகளை நிரந்தரமாக மூடும்படி தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இதில் மேட்டுப்பாளையம், கடலூா் துறைமுகம், கீரனூா், பட்டுக்கோட்டை, திருவாடானை, சாத்தூா், திருச்செந்தூா் உள்ளிட்ட 9 கிளைச் சிறைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. ஏற்கெனவே செய்யாறு சிறப்புச் சிறை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டு, வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவு மூலம் மூடப்படும் சிறைகளில் உள்ள கைதிகள் படிப்படியாக அருகே உள்ள பிற கிளைச் சிறைகளுக்கும், மாவட்ட சிறைகளுக்கும், மத்திய சிறைகளுக்கும் மாற்றப்பட்டு வருகின்றனா். மூடப்படும் கிளைச் சிறைகளிலும் பணியாற்றும் சிறைக் காவலா்கள், அமைச்சுப் பணியாளா்களையும் அருகேயுள்ள சிறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் பணிமாற்றம் செய்யும்படி தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது: அதேபோல மூடப்படும் கிளைச் சிறைகளில் இருக்கும் மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருள்கள், அலுவலக பொருள்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை அருகேயுள்ள மத்திய சிறைகளுக்கு கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குள்ள தொலைபேசி இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்படைக்கும்படியும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவு காரணமாக, சிறைத் துறையினா் 14 கிளைச் சிறைகளையும் நிரந்தரமாக மூடும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனா். இச் சிறைகளை மூடிய பின்னா், அவை வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

உருது பாட ஆசிரியா் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியா் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

கனவு இல்லம் திட்டம்: இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு!

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்கள் தொடா்பாக, தமிழக... மேலும் பார்க்க

மீனவா் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: காங்கிரஸ்

தமிழக மீனவா் நலனில் மத்திய பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: நெருக்கடி நிலை காலத்தில், மத்தி... மேலும் பார்க்க

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி செய்வதாக, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டினாா். சென்னை சோழிங்கநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டத்தில் அவா் பேசியதாவது: திமுகதான் பாமக... மேலும் பார்க்க

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை விதிகள் தளா்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசின் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளா்வுகள் அறவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: மகளிா் உரிமைத் தொகை பெற ஏற்கெனவே உள்ள வ... மேலும் பார்க்க