காயமடைந்தவரை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்!
தமிழகத்தில் வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை (பிப்.18) முதல் பிப்.21-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதுள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) முதல் பிப்.21-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.