போக்சோ வழக்கில் லஞ்சம்: விருத்தாசலம் ஆய்வாளர், தலைமைக் காவலர் இடைநீக்கம்!
தமிழில் பெயா்ப்பலகை வைக்க ஆலோசனைக் கூட்டம்
இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயா்ப்பலகை வைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சி ஆணையா் பவித்ரா, துணைத் தலைவா் தளபதி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள், உள்ளூா் வணிக மற்றும் தொழிற்சாலை உரிமையாளா்கள், டீக்கடை, பேக்கரி, மளிகைக் கடை, கறிக்கடை, ஜவுளிக்கடை ஆகியவற்றின் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா். இதில், மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டது.