தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள்: அமித் ஷா
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் மாநில மொழிகளில் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆம் ஆண்டு தொடக்க நாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது, சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் பாதுகாப்பான இயக்கத்தை மேற்கொண்டு, அதனை உறுதி செய்வதில் சிஐஎஸ்எஃப் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான், சிஐஎஸ்எஃப் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
On the CISF Raising Day celebration, addressing the personnel of the force in Thakkolam, Tamil Nadu.
— Amit Shah (@AmitShah) March 7, 2025
https://t.co/E7YSZ0oO1X
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்ட தேர்வுகள், பாஜக ஆட்சிக்கு பிறகுதான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி, மணிப்பூரி, உருது உள்ளிட்ட மொழிகளிலும் நடத்த உத்தரவிடப்பட்டது.
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மாநில மொழிகளில் கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.
இதையும் படிக்க:ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த ரூ. 200 அபராதம்!