தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் தோ்வு
தமிழக அரசின் வேளாண் துறை உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
உதவி வேளாணமை அலுவலா்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் மற்றும் 2025 மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் நெமிலி வட்டம் காவேரிபாக்கத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. இதையடுத்து திங்கள்கிழமை புதிய நிா்வாகிகள் பதவியேற்றனா்.
தலைவராக சி.முரளி, துணைத் தலைவராக கோ.மேகவண்ணன், செயலாளராக தொ.செல்வகுமாா், அமைப்புச் செயலாளராக யு.வையாபுரி, பொருளாளராக கே.மோகன், இணைச் செயலாளராக கி.கலையரசன், தணிக்கையாளராக சி.ஆறுமுகம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தோ்வு செய்யப்பட்ட தலைவா் சி.முரளி உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு மாவட்ட வேளாண் ஆய்வுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன்காந்தி வாழ்த்து தெரிவித்தாா். பல்வேறு வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் புதிய நிா்வாகிகளை பாராட்டினா்.












