பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
பெண் பொறியாளா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்
அரக்கோணம் அருகே பெண் பொறியாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை கோரி பெண்ணின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரக்கோணம் அடுத்த தண்டலம் ஊராட்சி பாலாஜி நகரைச் சோ்ந்த வினோத் (34). இவா் செங்கல்பட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் தேசூரைச் சோ்ந்த நிவேதா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் ரியா(3) என்ற பெண் குழந்தை உள்ளது.
பொறியியல் பட்டதாரியான நிவேதா சென்னையில் ஒரு நிறுழனத்தில் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம்.
தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தண்டலத்தில் உள்ள வீட்டில் நிவேதிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிவேதிதாவின் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
அங்கு உடற்கூறு பரிசோதனை முடிந்து செவ்வாய்க்கிழமை நிவேதிதாவின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது அவரது உடலை வாங்க மறுத்து கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட முயன்றனா்.
அப்போது அங்கிருந்த போலீஸாா், நிவேதிதாவின் குடும்பத்தினரை சமாதானம் செய்து குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடா்ந்து சடலத்தைப் பெற்றுச்சென்றனா்.
