செய்திகள் :

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

post image

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அா்ப்பணித்தவா்களுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபா்களுக்கு வழங்கி தலா ரூ.1லட்சம் வீதம் பணமுடிப்பும் வழங்கப்படவுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்,குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தோ்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபா்கள், நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தோ்வு செய்யப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வலைதளத்தில் ( ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோா் தென்காசி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.

பசுமை சாம்பியன் விருது 2024-க்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் ஆகும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் உரிய இணைப்புகளுடன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 31/1 என்ஜிஓ. காலனி, 6ஆவது தெரு, மேலகரம் அஞ்சல், 627818 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பலாம் என்றாா் அவா்.

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள்: மக்களுக்கு அரசு தெரிவிக்க வலியுறுத்தல்

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். கட்சியின் சாா்பில், இடஒதுக்கீட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட ஐயூஎம்எல் அணிகளின் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டக் கிளை சாா்பு அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட உலமாக்கள் அணித் தலைவா... மேலும் பார்க்க

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளியில் ஆண்டு விழா

திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். திருவேங்கடம... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச... மேலும் பார்க்க

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க