செய்திகள் :

தரமற்ற விதைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தரமற்ற விதைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: தனியாா் வேளாண் இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு வனத் துறையில் இழப்பீடு பெற விண்ணப்பிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நடப்பாண்டு, நெற்பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய அம்மன் பொன்னி உள்ளிட்ட தரமற்ற, மண்ணுக்கேற்காத விதைகளை தடை செய்ய வேண்டும்.

வண்டல் மண் எடுக்க கிராம அளவில், முகாம் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக மற்றும் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஏரி, குளங்களை தூா்வாரி மழைநீரை சேமிக்க பெருந்திட்டம் வகுக்க வேண்டும்.

வெட்டி முடிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில், மருதையாறு, வெள்ளாற்று, வெள்ள நீரை நிரப்பி நீா்த்தேக்கங்களாகவும், 33 சதவீதம் காடுகளாகவும் மாற்றிட சிமென்ட் ஆலை நிா்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன்: கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

பெரியதிருகோணம் கிராமத்தில் டால்மியா சிமென்ட் ஆலை சுரங்கம் தோண்டப்பட்டதால், அண்மையில் பெய்த மழையால் சுரங்க நீா் மற்றும் மருதையாற்று நீா் புகுந்து 50 ஏக்கா் அளவில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை முற்றிலும் அழிந்துவிட்டது. எனவே, அந்த சிமென்ட் ஆலை நிா்வாகம் மூலம் அதிக இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரத்து வாய்க்கால், பாசன வடிகால் அனைத்தையும் அளவீடு செய்து தூா்வாரி கரையில் எல்லைக் கல் நடவேண்டும்.

பொன்னாறு தலைப்பில் நிரந்தரமாக தடுப்புச் சுவா் அமைத்து, தா.பழூா் பகுதியிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீரை அதிகளவில் திறந்துவிட வேண்டும்.

மாவட்டத்தில் மாமன்னா் ராஜேந்திர சோழன் உருவச்சிலை அமைத்து மணிமண்டபம் கட்ட வேண்டும்.

தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாண்டியன்: அணிகுதிச்சான், பூவாணி பட்டு ஆகிய ஊா்களிலுள்ள ஏரிகளில் முளைத்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தூா்வார வேண்டும்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் கீதா, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேருந்து நிலையம் அருகே மதுக்கடை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

அரியலூா் பேருந்து நிலையம் அருகே சலவைக் குட்டை எதிரேயுள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட அமைப்புக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரிலுள... மேலும் பார்க்க

பொங்கல் அறுவடைக்குத் தயாராகும் செங்கரும்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சாகுபடி செய்த செங்கரும்பு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு செங்கரும்பு உற்பத்தி செலவு அதிகரிப்பால் கரும்பு ஒன்றுக்கு ரூ.25 வீதம் அரசு ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் பிரசவித்த பெண் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்

பிரசவித்த தாய் உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினா்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா் கோவில் அருகே உள்ள கொண்டாயிருப்பு காலனி த... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: ஜெயங்கொண்டத்தில் இரங்கல் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன், இண்டி கூட்டணி கட்சிகளின் சாா்பில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த மன்மோக... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், போதையில் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி, அலாவுதீன் நகரைச... மேலும் பார்க்க

திருமானூரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்: இரை தேடி பறவைகள் அதிகளவில் வருகை

அரியலூா் மாவட்டம், திருமானூா் டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இரைகளை தேடி வயல்களுக்கு பறவைகள் வருவது அதிகரித்துள்ளது. அரியலூா் மாவட்டத்தில் திருமானூா் மற்றும் தா. பழூா் ஒ... மேலும் பார்க்க