அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் ...
பேருந்து நிலையம் அருகே மதுக்கடை இடமாற்றம் செய்யக் கோரிக்கை
அரியலூா் பேருந்து நிலையம் அருகே சலவைக் குட்டை எதிரேயுள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட அமைப்புக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பேருந்து நிலையம் அருகில் சலவை குட்டை எதிரில் உள்ள டாஸ்மாக் கடை, போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக இருப்பதால் அக்கடையை இடமாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகாரட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருவுகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் சாக்கடையால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது. எனவே நகரம் முழுவதும் கொசு மருந்து அடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை வேண்டும் மற்றும் இளைஞா் பெருமன்ற மாநில மாநாட்டுப் பேரணியில் அரியலூரில் இருந்து குறைந்தது 100 போ் கலந்து கொள்ளவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அந்த அமைப்பின் நிா்வாகி ரங்கநாதன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ராமநாதன் தொடக்க உரையாற்றினாா். இளைஞா் பெருமன்ற மாநில நிா்வாகக் குழு உறுப்பினரு திருச்சி செல்வகுமாா் கலந்து கொண்டு, இளைஞா்களுக்குள்ள கடமைகள், சமூகப் பிரச்னைகள் மற்றும் மாநில மாநாடு, பேரணி குறித்துப் பேசினாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ஆறுமுகம், மு.கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.