செய்திகள் :

தருமபுரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

தருமபுரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரா்களும் கலந்துகொள்ளும் ‘தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்’ மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபா்களை நேரடியாக தோ்வுசெய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே. இதன்மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுவோருக்கு, அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இந்த மாதத்துக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 21-ஆம் தேதி தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு விற்பனையாளா், மாா்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பா்வைசா், மேலாளா், கம்ப்யூட்டா் ஆப்ரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபா்களை தோ்வுசெய்ய உள்ளனா். பள்ளிப் படிப்பு, டிப்ளமோ, பட்டப் படிப்பு என பல்வேறு கல்வித் தகுதிகளுக்கும் ஆள்கள் தேவை என தனியாா் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் மாா்ச் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீா்ப்பு: திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரூா்: தமிழக ஆளுநா் ஆா்.என் ரவியின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற அளித்துள்ள தீா்ப்பினை வரவேற்று திமுகவினா் பட்டாசுகளை வெடித்து செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி தெரிவித்தனா். தமிழக சட்டப் பேரவையில் இயற... மேலும் பார்க்க

அரசு நலத் திட்ட விழா: ஆட்சியா் ஆலோசனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடத்தப்படும் அரசு நலத் திட்ட விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது. தருமபுர... மேலும் பார்க்க

ஸ்ரீராம நவமி விழா: குமாரசாமிப்பேட்டை சென்ன கேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

தருமபுரி: குமாரசாமிப்பேட்டைசென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி... மேலும் பார்க்க

தொப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: தொகுப்பூதிய பயிற்றுநா், உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொழிற் பயிற்சி அலுவலா் சங்கத்தினா் கடத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு தொழிற்க... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் விசிக ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: வக்ஃக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்எ... மேலும் பார்க்க

நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி: நல்லம்பள்ளியில் உள்ள நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தரத்தை ஆட்சியா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தரமான... மேலும் பார்க்க