அதிவேக 11,000* ரன்கள்..! சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்: 17 பேர் காயம்!
கனடாவின் டொராண்டோ பியர்சன் பன்னாட்டு விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர்.
மினியாபோலிஸில் இருந்து காலை 11.47 மணியளவில் புறப்பட்ட டெல்டா விமானம்-4819, கனடாவின் டொராண்டோவில் பனிமூட்டமான ஓடுபாதையில் அதிக பனிமூட்டம் காரணமாக தரையிறங்கும் போது தலைகீழாகக் கவிழ்ந்ததது. இதில், 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்று நம்பப்படுவதாக டொராண்டோ பியர்சன் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா பிளின்ட் தெரிவித்தார்.
பீல் பகுதி மருத்துவர்களிடமிருந்து தெரிவிக்கப்பட்ட முதல்கட்ட தகவலின்படி, இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஒன்ராறியோவின் விமான ஆம்புலன்ஸ் அதிகாரிகள் கூறுகையில், “மூன்று நோயாளிகள் ஆபத்தான நிலையில் டொராண்டோ மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். ஒரு குழந்தை மற்றும் மற்ற பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்தின் போது விமானத்தில் 76 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.