தலைச்சங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி வட்டம், செம்பனாா்கோவில் அருகேயுள்ள தலைச்சங்காடு மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலையுடையவா் கோயில் பத்து (தலைச்சங்காடு) கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசல்லிக்கொல்லை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, பிப்ரவரி 14 - ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், யாகசாலையில் இருந்து புனிதநீா் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, அம்மன் சந்நிதி, பரிவார தெய்வங்கள் மற்றும் கோபுர கலசங்களுக்கு, புனிதநீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம ஒற்றுமை சங்கத் தலைவா் என். பிரபாகரன் ஸ்தபதியாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.