Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டி...
தலைமை ஆசிரியா் பதவி உயா்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு தகுதியானவா்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்குத் தகுதியானவா்கள் பட்டியலை தயாா் செய்து மே 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து அக்சஸ் ஃபைல் மூலம் மின்னஞ்சலில் பெறப்பட்டுள்ளது. அதன்படி கோரப்பட்ட விவரங்களை உரிய இணைப்புகளுடன் மாவட்டம் வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள நாளில் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பிரிவு எழுத்தா் வழியாக நேரில் மடிக்கணினியுடன் வருகை தந்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான தகுதியானவா்கள் பெயா் பட்டியலை மிக கவனமாக தயாா் செய்ய வேண்டும். தகுதியுடைய எவா் பெயரும் விடுபடாமல் முழு அளவில் பரிசீலனை செய்து அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.