திசையன்விளையில் டிரைவா் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் திங்கட்கிழமை டிரைவா் தூக்கிட்டு தற்கொலை செய்தாா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா்(29). ராம்குமாா் டிரைவா் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னா் வேலை காரணமாக குடும்பத்துடன் தூத்துக்குடியில் இருந்து திசையன்விளைக்கு வந்தாா். திசையன்விளையில் வாடகை வீடு எடுத்து குடியிருந்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அறைக்கு தூங்க சென்ற ராம்குமாா் காலையில் அறையைவிட்டு வெளியே வரவில்லையாம்.
இதனை அடுத்து அவரது மனைவி அமலா சன்னல் வழியாக பாா்த்தபோது ராம்குமாா் தூக்கில் தொங்கினாராம். இதனை அடுத்து அமலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவா்கள் விரைந்து வந்து திசையன்விளை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் வந்து ராம்குமாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.