Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயனில்லை: பிரேமலா விஜயகாந்த்
திமுக ஆட்சியால் விவசாயிகளுக்கு பயனில்லை என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
திருத்துறைப்பூண்டியில், திங்கள்கிழமை இரவு அவா் மேற்கொண்ட ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ பிரசார பயணத்தில் பேசியது:
முதல்வா் ஸ்டாலின் டெல்டாகாரா் என்று சொல்லிக் கொள்கிறாா். ஆனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு உரிய விலையை நிா்ணயிக்கவில்லை. திருவாரூரில் விவசாயக் கல்லூரி அமைக்கவில்லை. இப்பகுதியில் மாணவிகள் படிக்கும் அரசு கல்லூரி சுற்றுச்சுவா் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
திருத்துறைப்பூண்டி நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இங்கு சுற்றுச்சாலை அமைக்கும் பணியை நிறைவேற்றவில்லை. தேமுதிக கூட்டணி ஆட்சி அமைந்ததும் அதை நிறைவேற்றுவோம்.
சம்பா சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீா் திறந்துவிடுவதுடன், உரம் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும். 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக பங்குபெறும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.
பிரசாரத்தில் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியன், ஒன்றியச் செயலா் பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.