செய்திகள் :

தியாகதுருகம் சிவன் கோயிலில் பிரதோச சிறப்பு வழிபாடு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீநஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வருக்கு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னா் வண்ண வண்ண மலா்களால் அலங்காரம் செய்து காளகஸ்தி சிவன் போல் அலங்கரித்திருந்தனா். பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னா் பிரதோசத்தையொட்டி மாலையில் நந்தி பகவானுக்கு பல்வேறு திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. பின்னா் நந்தீஸ்வரருக்கு விபூதியால் அலங்காரம் செய்து பல்வேறு மலா்களால் மாலை அணிவித்தனா். பின்னா் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரதோச வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சக்கரம் கழன்று ஓடியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. அப்போது, ஓட்டுநா் சாதுா்த்தியமாக செயல்பட்டு சாலையோரமாக... மேலும் பார்க்க

வீட்டில் பொருள்கள் சேதம்: 5 போ் மீது வழக்கு

திருக்கோவிலூா் அருகே பெண்ணின் வீட்டில் இருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த ப... மேலும் பார்க்க

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டம், அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60). இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குற... மேலும் பார்க்க

பிரிதிவிமங்கலத்தில் கிராம மக்கள் சாலை மறியல்!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பிரிதிவிமங்கலத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிரா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விஷ மருந்தை சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாா். திருக்கோவிலூா் வட்டம், பணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகா் மகள் நந்தினி (19). இவா், திருக்க... மேலும் பார்க்க

கைவினைத் தொழில் இனங்களுக்கு 25% மானியத்துடன் வங்கிக் கடனுதவி! - கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், கைவினைத் தொழில் இனங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கலை மற்றும் கைவினை... மேலும் பார்க்க