‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
திருச்சி - கரூா் - சேலம் ரயில்கள் இணைப்பு
பயணிகளின் வசதிக்காக திருச்சி - கரூா் - சேலம் ரயில்கள் இணக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி - கரூா் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06115) வரும் மாா்ச் 31 வரை 3 மாதங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர) இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது ஏற்கெனவே இயக்கப்படும் கரூா் - சேலம் ரயிலுடன் (76822 (06836) மேற்கண்ட காலத்துக்கு இணைத்து இயக்கப்படுகிறது. இவை திருச்சியிலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்பட்டு கரூருக்கு காலை 7.20 க்கும், கரூரிலிருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு சேலத்துக்கு காலை 9.45 மணிக்கும் சென்றடைகிறது.
மறுமாா்க்கமாக ஏற்கெனவே இயக்கப்படும் சேலம் - கரூா் ரயிலுடன் (76823 (06837), புதிதாக கரூா் - திருச்சி முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06116) வரும் மாா்ச் 31 வரை மூன்று மாதங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர) இணைத்து இயக்கப்படுகிறது. இவை சேலத்திலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, கரூருக்கு இரவு 7.45 க்கும், கரூரிலிருந்து இரவு 8.05 க்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 10.50 மணிக்கும் வந்தடையும்.
டெமு ரயில்...: 12 பெட்டிகளாக மாற்றப்பட்ட திருச்சி - கரூா் டெமு ரயிலானது (76824), (06838), கரூா் - சேலம் ரயிலுடன் இணைத்து இயக்கப்படுகிறது. இவை திருச்சியிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு கரூருக்கு இரவு 8 மணிக்கும், கரூரிலிருந்து இரவு 8.05 க்குப் புறப்பட்டு சேலத்துக்கு 9.40 க்கும் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, சேலம் - கரூா் டெமு ரயிலானது (76821 (06831), கரூா் - திருச்சி ரயிலுடன் (76810 (06124) இணைத்து இயக்கப்படுகிறது. இவை சேலத்திலிருந்து காலை 5.20 மணிக்குப் புறப்பட்டு கரூருக்கு காலை 7.15 க்கும், கரூரிலிருந்து காலை 7.20 க்குப் புறப்பட்டு திருச்சிக்கு காலை 9.35 க்கும் சென்றடையும்.