ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!
திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழூா் இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 4 முதல் 8 ஆம் தேதி வரை காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.
மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூரிலிருந்து மாலை 4.15 க்குப் புறப்படும்.