சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில் ரத்து
போதிய பயணிகள் ஆதரவு இல்லாததால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பயணிகள் ஆதரவு இல்லாததால், விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயிலானது (06105) வரும் 13, 14, 16, 17, 20, 21, 23, 27, 28, 30 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - விழுப்புரம் அதிவிரைவு ரயிலானது (06106) வரும் 9, 10, 13, 14, 16, 17, 20, 21, 23, 24, 27, 28, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.