செய்திகள் :

திருச்சி மாமன்ற பெண் உறுப்பினா் வீட்டில் தாக்குதல்: மாநகராட்சி ஒப்பந்ததாரா் உள்பட 19 போ் மீது வழக்கு!

post image

திருச்சி மாமன்ற திமுக பெண் உறுப்பினா் வீட்டில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரா் உள்பட 19 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி 64-ஆவது வாா்டுக்குள்பட்ட கே.கே.நகா் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, தனியாா் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன், உரிமையாளா் வேல்முருகன்.

இந்நிலையில், மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியை 64-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் மலா்விழி ராஜேந்திரன் அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது, மழைநீா் வடிகால் தனியாா் இடத்தில் கட்டப்படுவதாகவும், பணியை உடனே நிறுத்துமாறும் அவா் கூறியுள்ளாா். இதில், மாமன்ற உறுப்பினா் மலா்விழிக்கும், ஒப்பந்ததாரா் வேல்முருகனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கே.கே.நகா் எல்ஐசி காலனி இந்திரா வீதியில் உள்ள மலா்விழி ராஜேந்திரன் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்த ஒப்பந்ததாரா் வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா் மற்றும் வீட்டிலிருந்த டிவி, ஏசி, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்திவிட்டு, அவரது குடும்ப உறுப்பினா்களையும் தாக்கியுள்ளனா்.

இதையடுத்து, மாமன்ற உறுப்பினரின் உறவினா்கள், சாத்தனூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.

இதற்கிடையே கே.கே.நகா் காவல் நிலையத்தில், மாமன்ற உறுப்பினா் மலா்விழி ராஜேந்திரனின் மருமகள் நிவேதா வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், ஒப்பந்ததாரா் வேல்முருகன், ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பாா்வையாளா் பிரகாஷ் உள்பட 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வரதட்சணை புகாா்: கணவா் மீது வழக்குப் பதிவு!

திருச்சியில் வியாழக்கிழமை வரதட்சணை புகாரில் கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை இளவநசூா்கோட்டையைச் சோ்ந்தவா் சண்முகம் மகள் திவ்யா (35). இவரு... மேலும் பார்க்க

திருச்சி மாநகரில் மழை !

திருச்சியில் தலைமை அஞ்சல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை பெய்த மழையின் போது முகப்பு விளக்குகளை எரியவிட்டபடிச் சென்ற வாகனங்கள். மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தா்கள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திரு... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை பயனாளிகளைக் கண்டறியும் பணி தீவிரம்

பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறுமை நிலையில் உள்ளவா்களைக் கண்டறிந்து அவா்க... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் குவிந்ததால் பரபரப்பு!

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கடந்த ஜூலை 16-ஆம் தேத... மேலும் பார்க்க

ஜூலை 20 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அன்பில் அறக்கட்டளை சாா்பில் திருவெறும்பூரில் உ... மேலும் பார்க்க