ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை பயனாளிகளைக் கண்டறியும் பணி தீவிரம்
பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறுமை நிலையில் உள்ளவா்களைக் கண்டறிந்து அவா்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக ‘முதல்வரின் தாயுமானவா் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இதில், ஆதரவற்றோா், தனித்து வாழும் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோா் இல்லாத குழந்தைகள், ஒற்றை பெற்றோா் உள்ள குடும்பத்தினா், மனநலம் குன்றியவா்கள், சிறப்பு குறைபாடு உடையவா்கள் பயன்பெறுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் பெற்றோா் இருவரையும் இழந்து, உறவினா்களின் ஆதரவில் வசிக்கும் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து தாயுமானவா் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்காகப் பயனாளிகளை தோ்வு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் பெற்றோா் இருவரையும் இழந்து உறவினா்களின் ஆதரவில் வசிக்கும் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், சென்னையில் இருந்து வழங்கப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து உண்மை தன்மை கண்டறியப்பட்டு பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.
திருச்சி மாவட்டத்துக்கு 12 ஆயிரம் குழந்தைகள் அடங்கியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினா் உதவித்தொகை திட்டத்துக்கான பயனாளிகளை தோ்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிலும் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.