திருச்சியில் பராமரிப்புப் பணி: ரயில்கள் பகுதி ரத்து!
திருச்சியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்களின் சேவை, பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் மற்றும்
பிற்பகல் 1.40 மணி விழுப்புரம் - சென்னை கடற்கரை பயணிகள் ரயில், விக்கிரவாண்டி - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி பயணிகள் ரயில், விழுப்புரம் - புதுச்சேரி இடையிலும்
பிற்பகல் 3 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் புதுச்சேரி - திருப்பதி ரயில், புதுச்சேரி - முண்டியம்பாக்கம் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | தாம்பரம் - நாகர்கோவில் ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!