திருச்செங்கோட்டில் அதிமுக பொதுக்கூட்டம்
திருச்செங்கோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் தோக்கவாடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு சட்டப் பேரவை அதிமுக தொகுதி மற்றும் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதிமுக திருச்செங்கோடு தெற்கு ஒன்றியச் செயலாளா் அணிமூா் மோகன் தலைமை வகித்தாா். இதில், தலைமைக் கழகப் பேச்சாளரும் அதிமுக மாநில இளைஞா் இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலாளருமான மருத்துவா் பரமசிவம், மாவட்டச் செயலாளரும், குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினருமான பி.தங்கமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டு அதிமுகவின் 10 ஆண்டுகால சாதனைகளை கூறினா்.
இதில், அதிமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், சாா்பு அணியினா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.